Sean Roldan & Gautham Vasudev Menon - Edhuvaraiyo paroles de chanson

paroles de chanson Edhuvaraiyo - Sean Roldan & Gautham Vasudev Menon



எதுவரையோ எதுவரையோ
இந்த வழியே எதுவரையோ
இருள் அணியாதோ
விதியோ தலை விதியோ
இந்த கதியே தலை விதியோ
துயர் மறையாதோ
மறுபடி நிலா பொழியாதோ
மறுபடி நிலா பொழியாதோ
நிறையாதோ
நிழல் தரும் கணா விரியாதோ
நிழல் தரும் கணா தெரியாதோ
விரியாதோ
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் தருதே
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
பாரம் வந்து பாரம் வந்து சேர
யாரும் இல்லை யாரும் இல்லை கூற
தனிமையிலே உலவுகிறேன்
அழுதிடவே பழகுகிறேன்
வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று
ஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று
கடல் நடுவே ததும்புகிறேன்
கரை வருமா இறங்குகிறேன்
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ
அடைபடும் புறா நகராதோ உயராதோ
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே



Writer(s): Vivek, Gautham Vasudev Menon, Anirudh Ravichander


Sean Roldan & Gautham Vasudev Menon - Kolamaavu Kokila (Coco) [Original Motion Picture Soundtrack]



Attention! N'hésitez pas à laisser des commentaires.