S. P. Balasubrahmanyam feat. Sujatha - Azhakooril (From "Thirumalai") текст песни

Текст песни Azhakooril (From "Thirumalai") - S. P. Balasubrahmanyam , Sujatha




அழகூரில் பூத்தவளே
எனை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
எனை மார்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
அழகூரில் பூத்தவளே
எனை அடியோடு சாய்த்தவளே
நீ உடுத்தி போட்ட உடை
என் மனதை மேயுமடா
நீ சுருட்டி போட்ட முடி
மோதிரமா ஆகுமடி
இமையாலே நீ கிருக்க
இதழாலே நான் அழிக்க
கூச்சம் இங்கே கூச்ச பட்டு போகிறதே
சடையாலே நீ இழுக்க
இடை மேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே
என்னை திரியாக்கி உன்னில் விளக்கேத்தி
எந்நாளும் காத்திருப்பேன்
ஹோய் ஹோய் ஹோய் அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
நீ முறிக்கும் சோம்பலிலே
நான் ஒடிஞ்சி சாஞ்சிடுவேன்
நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே
நான் இறங்கி தூங்கிடுவேன்
குறிலாக நான் இருக்க
நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ் சங்க தமிழ் ஆனதடி
அறியாமல் நான் இருக்க
அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூருமடா
என்னை மறந்தாலும் உன்னை மறவாத
நெஞ்சோடு நான் இருப்பேன்
ஹோய் ஹோய் ஹோய்
அன்பூரில் பூத்தவனே
ஹம் ஹம்
என்னை அடியோடு சாய்த்தவளே
ஹம் ஹம் ஹம்
மழையூரின் சாரலிலே
ஹம் ஹம்
என்னை மார்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளி தானே
உயிர் நூலில் கொப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்



Авторы: R VAIRAMUTHU, VIDYASAGAR, VAIRAMUTHU R



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}