Mano and Anuradha Sriram - Ennavale Ennavale Lyrics

Lyrics Ennavale Ennavale - Mano and Anuradha Sriram




லாலி பப்பு லாலி பப்பு போல் இனிக்கும் மனசு
ஜாலி டைப்பு பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
உயிரில் பூப்பறித்த காதலியும் நீதான்
உள்ளம் தேடுமொரு தேதையும் நீதான்
இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்
இளமை நனையவரும் பூமழையும் நீதான்
வேர்க்க வைத்தாய் நீதான் நீதான்
விசிரி விட்டாய் நீதான் நீதான்
தேடி வந்தாய் நீதான் நீதான்
தேட வைத்தாய் நீதான் நீதான்
புதையலைப் போல வந்து கிடைத்தவளும் நீதான்
தெரியாமல் பெண் மனதைப் பறித்ததும் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என்னை மூடிவிடும் வெண்பனியும் நீதான்
குளிரும் மார்கழியில் கம்பளியும் நீதான்
என்னைத் உறங்க வைக்கும் தலையனையும் நீதான்
தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான்
மோகமெல்லாம் நீதான் நீதான்
முத்தங்களும் நீதான் நீதான்
புன்னகையும் நீதான் நீதான்
கண்ணீரும் நீதான் நீதான்
கண்களை மூடிவிட்டு ஒளிந்தவளும் நீதான்
ஒளிந்தவளின் அருகில் வந்து அனைத்ததும் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்



Writer(s): Palani Bharathi



Attention! Feel free to leave feedback.