K. S. Chithra feat. S. P. Balasubrahmanyam - Azhagu Azhagu Nee Nadanthal paroles de chanson

paroles de chanson Azhagu Azhagu Nee Nadanthal - S. P. Balasubrahmanyam , K. S. Chithra




பெண்குழு: அழகு... அழகு...
பெண்: நீ நடந்தால் நடை அழகு
பெண்குழு: அழகு
பெண்: நீ சிரித்தால் சிரிப்பழகு
பெண்குழு: அழகு
பெண்: நீ பேசும் தமிழ் அழகு
பெண்குழு: அழகு
பெண்: நீ ஒருவன் தான் அழகு
பெண்குழு: அழகு ...அழகு
பெண்: ஓ.ஓ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு
பெண்குழு: அழகு... அழகு
பெண்குழு: பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸா
பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸா
நீ நீ ஸப கக ஸரி தபத நிஸா
ஸகம கரி ஸா தப கம கரி ஸா
பெண்குழு: சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்கிக்கிச்சாம்
ஆண்: நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல
பெண்: அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும்
ஆசையை திருகிவிடு
இரு விழி மயங்கி இதழ்களில் இறங்கி
உயிர் வரை பருகி விடு
ஆண்: ஓஹோ முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது
பெண்குழு: அழகு... அழகு
பெண்: ஆ.நீ நடந்தால் நடை அழகு
பெண்குழு: அழகு
பெண்: நீ சிரித்தால் சிரிப்பழகு
பெண்குழு: அழகு
பெண்: நீ பேசும் தமிழ் அழகு
பெண்குழு: அழகு
பெண்: நீ ஒருவன் தான் அழகு
பெண்குழு: அழகு... அழகு... (இசை)
பெண்குழு: ஓ... ஓ... ஓஹோஹோ.ஹோ.ஹோ.ஓ.
ஓ... ஓ... ஓஹோஹோ.ஹோ.ஹோ.ஓ.
ஓஹோ.ஹோ.ஹோ.ஓ
ஓஹோ.ஹோ.ஹோ.ஓ
பெண்: நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே
ஆண்: மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு
மது ரசம் அருந்தட்டுமா
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதட்டுமா
முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா
பெண்குழு: அழகு... அழகு
ஆண்: ஓ.நீ நடந்தால் நடை அழகு
பெண்குழு: அழகு
ஆண்: நெருங்கி வரும் இடை அழகு
பெண்குழு: அழகு
ஆண்: வேல் எரியும் விழி அழகு
பெண்குழு: அழகு
ஆண்: பால் வடியும் முகம் அழகு
பெண்குழு: அழகு. அழகு
ஆண்: ஓ.ஓ தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று எனை அழைக்கும்
தாமரையும் அழகு
பெண்குழு: அழகு. அழகு. அழகு. அழகு



Writer(s): Vairamuthu


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}