Ilaiyaraaja - Iruvizhiyin (From "Siva") текст песни

Текст песни Iruvizhiyin (From "Siva") - Ilaiyaraaja feat. S. P. Balasubrahmanyam & K. S. Chithra



லாலாலாலாலாலா லாலல
லாலாலாலாலாலா லாலல
லாலாலாலா
லாலாலாலா
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது
விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
தொட்டில் இடும் இரு தேம்மாங்கனி
என் தோளில் ஆட வேண்டுமே
கட்டில் இடும் உன் காமன் கிளி
மலர் மாலை சூட வேண்டுமே
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
தேதி ஒன்று பார்க்கின்றேன்
கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்
கார் கால மேகம் வரும்
கல்யாண ராகம் வரும்
பாடட்டும் நாதஸ்வரம்
பார்க்கட்டும் நாளும் சுகம்
விடிகாலையும் இளமாலையும்
இடை வேளையின்றி இன்ப தரிசனம்
விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது
விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
உன் மேனியும் நிலைகண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்
ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்
எங்கே எங்கே ஒரே தரம்
என்னை உன்னில் பார்க்கிறேன்
இதோ இதோ ஒரே சுகம்
நானும் இன்று பார்க்கிறேன்
தென்பாண்டி முத்துக்களா
நீ சிந்தும் முத்தங்களா
நோகாமல் கொஞ்சம் கொடு
உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம்
விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது
லாலாலாலாலாலா லாலல
லாலாலாலாலாலா லாலல



Авторы: Ilaiyaraaja, Pulavar Pulamaippithan


Ilaiyaraaja - Siva (Original Motion Picture Soundtrack)
Альбом Siva (Original Motion Picture Soundtrack)
дата релиза
01-01-1989



Внимание! Не стесняйтесь оставлять отзывы.